×

6 ஆண்டுகள் வனவாசத்துக்குப்பின் ஊருக்கு திரும்பிய 4 குடும்பங்கள்

வேலூர்: வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை, சின்ன எட்டிபட்டு மலை கிராமத்தில் முத்து(50), பொன்னுசாமி(55) ஆகியோர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து இவர்களின் குடும்பம் உட்பட 4 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர். 6 ஆண்டுகளாக இவர்கள் வயல்காட்டில் தங்கி வனவாசம் அனுபவித்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் கண்ணீர் மல்க புகார் கொடுத்தனர். இரு தரப்பினரையும் நேற்று மாலை காவல் நிலையம் வரவழைத்து இன்ஸ்பெக்டர் நாகராஜன் விசாரணை நடத்தி, ‘ஊரான் (நாட்டாமை) பழனியிடம் இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது சட்டபடி குற்றம்’ என்று கூறி எழுதி வாங்கிக் கொண்டு இரு தரப்பினரையும் சேர்த்து வைத்தார். பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், ‘எங்கள் வனவாசம் இன்றுடன் முடிந்து விட்டது. மன நிறைவுடன் ஊருக்குள் செல்கிறோம்’ என்று ஆனந்த கண்ணீருடன் கூறினர்.

The post 6 ஆண்டுகள் வனவாசத்துக்குப்பின் ஊருக்கு திரும்பிய 4 குடும்பங்கள் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Muthu ,Ponnusamy ,Chinna Etipattu ,Vellore district ,Odugathur ,Peenchamanthi ,Dinakaran ,
× RELATED வேலூர் அடுத்த மேல்மொணவூரில் தேசிய...